articles

சனாதன சனியன் நவகவி

அடியே பொண்ணு தனம்!

ஆபத்தடி சனா தனம்!

அசந்தா நெருப்புல தள்ளுமடி!

-உன்ன சதி மாதா ஆக்கிக் கொல்லுமடி!        

 நாலாயிரம் வருஷம் பின்னே தள்ளி  

     நமக்கு வைக்குமடி தலையில் கொள்ளி!  

     தூக்கி வீசடி!-அது      

   துரோகம் மோசடி!                                                              (அடியே)

சாதிய கொஞ்சிக்கிட்டே சமத்துவம் பேசுமடி!

சனியன் சனியனடி சங்கிகளின் காவிக்கொடி!

பட்டுத் துணி சுத்தி வரும் பழைய பஞ்சாங்கமடி!

பார்ப்பனிய கஞ்சாப் பொடி ஆகுமா கதம்பப் பொடி!  

         சாமி சாமி என்பாண்டி!        

 சாமி மேலயே சவாரி செய்வாண்டி!          

தேசம் தேசம் என்பாண்டி!      

   தேசத்தையே போண்டி ஆக்கி அவன் வச்சாண்டி!      

                                                        (அடியே)

 சந்தையிலும் மந்தையிலும் நம்மை   

  நிக்க வச்சா ஒண்ணா சதுர்வர்ணத்தில் அவனவனும் எந்த வர்ணம்  

               சொல்லுங்கண்ணா? மூஞ்சியிலே நீ இந்த சாதி இன்னு முத்திரை ஏது?

பூணூல கழட்டிப்புட்டா பார்ப்பான் பள்ளன்      

யார்சொல் அப்போது?

       சனாதனம் ஹிட்லர் இனம் !      

         சாக்காடு போக மறுக்கும் நாத்தப் பொணம்!    

     தேசம் இது பூங்காவனம்.    

     பூங்காவ சனாதனம் பொட்டலா மாத்திப்புடும்!    

                                                           (அடியே)  

நெலத்துல பார்த்தா நம்ம இந்தியா ஒன்னு தானே?

நெஞ்சில தான் இந்தியன் தனித்தீவு ஆனானே!

கீழ் சாதி என்பவன் குள்ளமா ஒசரத்திலே?

மேல் சாதி ஆள் ரொம்ப நெட்டையா வளர்த்தியிலே?  

         காஷ்மீர் முதல் குமரி வரை        

 சதுர்வர்ணம் எதுக்கு ? சமத்துவ வர்ணம் அடி!    

     அன்பு வாசம் வீசட்டுமே!      

   நாத்தச் சனாதனம் நாட்டை விட்டு ஓடட்டுமே!                    

                                           (அடியே)

குறிப்பு:செப்டம்பர் இரண்டு 2023 சென்னை காமராஜர் அரங்கில் தமுஎகச நடத்தும் சனாதன  எதிர்ப்பு அரசியல் சாசன பாதுகாப்பு  மாநாட்டை ஒட்டி இந்தப் பாடல்